#BigBreaking || 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு., அதிரடியாக அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.! - Seithipunal
Seithipunal


கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2 வருடமாக நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. 

தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லாமல், தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்து வருகிறது.

தற்போது நோய்த்தொற்று பரவாமல் குறைவாக இருக்கும் காரணத்தினால், இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. 

மேலும், பொதுத் தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த இருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தினமும் வகுப்புகள் நடத்துவது குறித்து, டிசம்பர் 25ஆம் தேதி மீண்டும் ஆலோசனை செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று வந்துள்ளதால், முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 3ஆம் தேதி முதல் சுழற்சி முறை இன்றி, தினமும் வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு புதிய ஊரடங்கு தளர்வு அறிவிப்பின் போது அறிவித்திருந்த நிலையில், வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இந்த ஆலோசனைக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister anbil mahesg say jan school exam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->