நேரு ஸ்டேடியத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘சர்ப்ரைஸ்’ விசிட்...! - மைதானத்தின் தரத்தை சோதிக்க அதிரடி ஆய்வு...!
Minister Adhav Arjuna surprise visit Nehru Stadium Action packed inspection check quality stadium
தமிழக அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கிய சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த பத்தாம் தேதி விஜய் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவியேற்று புதிய நிர்வாகப் பயணத்தை தொடங்கினார்.

அவருடன் ஒன்பது அமைச்சர்களும் பொறுப்பேற்ற நிலையில், அவர்களுக்கான துறைகளும் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டன.அதன்படி, பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுப் பொறுப்பு ஆதவ் அர்ஜுனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று காலை சென்னை எழும்பூரில் அமைந்துள்ள நேரு விளையாட்டரங்கில் நேரடி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
அப்போது, விளையாட்டு வசதிகள், பயிற்சி மையங்களின் தரம் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கான அடிப்படை கட்டமைப்புகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக கலந்தாலோசித்தார்.
இதனைத் தொடர்ந்து, பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை நேரில் சந்தித்த அமைச்சர், அவர்களின் தேவைகள், இலக்குகள் மற்றும் விளையாட்டு முன்னேற்றங்கள் குறித்து ஆர்வமுடன் உரையாடி உற்சாகப்படுத்தினார்.
English Summary
Minister Adhav Arjuna surprise visit Nehru Stadium Action packed inspection check quality stadium