ஓவரா போது! ரவுடிசத்தை கையில் எடுக்கும் மார்க்கெட் சுங்கம் வசூலிப்பவர்கள்... ஏனோதானோ என்று அரசு அதிகாரிகள்!!! - விக்ரமராஜா
Market toll collectors who take up rowdiness Government officials who decide on something vikramaraja
வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் 'விக்கிரமராஜா', ஈரோட்டில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது," தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாக கடந்த மே 5-ந் தேதி நடைபெற்ற மாநில மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தீர்மானங்களை அறிவித்திருந்தார்.

குறிப்பாக வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு தலா ரூ.1 லட்சம் தொகையை ரூ.3 லட்சமாக உயர்த்தி மீண்டும் ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.மே 5-ந் தேதியை வணிகர் தினமாக அரசு அறிவித்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ஈரோடு மாவட்டத்தில் காய்கறி பழ மார்க்கெட் வாகனம் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது.
இதே போன்று சுங்க கட்டணம் வசூலிப்பதற்கும் அரசு அனுமதி அளித்திருக்கிறது.சுங்க கட்டணம் என்று சொன்னால் தற்காலிக கடைகளுக்கு மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். நிரந்தரக் கடைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்பது அரசாணையில் இருக்கிறது. ஆனால் இதை அரசுத்துறை அதிகாரிகள் ஏனோதானோ என்று முடிவு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மார்க்கெட் சுங்கம் வசூலிப்பவர்கள் தானாகவே ரவுடிசத்தை கையில் எடுக்க கூடிய சூழ்நிலையும் தமிழக முழுவதும் பல்வேறு மார்க்கெட்டுகளில் இது போன்ற சூழ்நிலைகள் இருக்கிறது. எனவே அரசு இதனை உடனடியாக முறைப்படுத்த வேண்டும். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆணையாளர், அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
மார்க்கெட்டில் சுங்க கட்டணத்திற்கு ரசீது கொடுப்பதே இல்லை. அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதற்கு என்ன உள்நோக்கம் இருப்பது என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கம் கேள்வியாக எழுப்புகிறது. இந்த பிரச்சனைக்கு முறையாக நல்ல தீர்வு ஏற்படும் என நம்பிக்கை உள்ளது.இல்லையென்றால் மாவட்டம் தோறும் வணிகர் பேரமைப்பின் சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தனியார் கட்டிடங்களில் நாங்கள் கடைகளை நடத்துகிறோம்.
அதற்கு அரசு முறையாக லைசன்ஸ் வழங்கியுள்ளது. அந்த கடைகளுக்கு சுங்க கட்டணம் தேவையில்லை என்பதை அரசாணை வெளியிட்டு இருக்கிறது.இதை தாண்டி சுங்க கட்டணம் வசூல் செய்வது தேவையற்றது. தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு வருகின்ற ஜூலை மாதம் 22ம் தேதி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி, லட்சத்தீவு உள்பட 7 அமைப்புகள் சார்பில் தென் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்ட திட்டங்களை மாற்றி அமைத்து விட்டார்கள்.
மீண்டும் தமிழகத்தில் வால்மார்ட்டு டி மார்ட் உடன் சேர்ந்து நுழைய சதிவலை பின்னிக் கொண்டிருக்கிறது. இது குறித்து முதலமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம். பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகள் முதலில் இலவசம் என்ற பெயரில் கொடுப்பார்கள். தமிழர்களின் ஒட்டு மொத்த வருமானத்தையும் கார்ப்பரேட் நிறுவனம் சுரண்டி கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Market toll collectors who take up rowdiness Government officials who decide on something vikramaraja