தேர்தல் ஆணையத்திற்கு கமல்ஹாசன் கட்சி சார்பில் பரபரப்பு மனு! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி தர வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையம் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு தேவையான சின்னத்தை கேட்டு கட்சிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. 

கடந்த டிசம்பர் 17ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி தரும்படி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளிநாடு செல்ல உள்ளதால் துணைத் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருடன் பாராளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 

ஆலோசனைக்கு பிறகு தேர்தல் தொடர்பான திட்டங்களை உருவாக்குவதற்கும், அதனை செயல்படுத்துவதற்கும், பிற குழுக்களை அமைப்பதற்கும் தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கியுள்ளார். 

இந்த குழுவின் உறுப்பினர்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோர் செயல்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மனுவை ஏற்று தேர்தல் ஆணையம் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்குமா என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

makkal needhi maiam petition election commission


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->