விளையாட்டை வாழ்வின் அங்கமாக்குங்கள்...! - தேசிய விளையாட்டு தினத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவுறுத்தல்...!
Make sports part of life Chief Minister Joseph Vijay instructions National Sports Day
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விளையாட்டின் முக்கியத்துவத்தையும், இளைய தலைமுறையினர் விளையாட்டில் அதிகம் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.இந்திய ஹாக்கி அணியின் புகழ்பெற்ற வீரரும், உலக அரங்கில் தனக்கென அழியாத முத்திரை பதித்தவருமான மேஜர் தியான் சந்த்தின் பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த சிறப்புமிக்க நாளில், நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவருக்கும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.விளையாட்டு என்பது வெறும் பதக்கங்களை வெல்வதற்கான களமாக மட்டும் இல்லாமல், ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு மற்றும் குழு உணர்வு போன்ற உயரிய பண்புகளை வளர்க்கும் சிறந்த தளமாகவும் விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு உடல்தகுதி மிகவும் அவசியம் என்றும், இளைய தலைமுறையினர் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறமைகளை மேலும் மேம்படுத்தி, தொடர்ந்து வெற்றிகளை குவித்து, இந்தியாவின் மூவர்ணக் கொடியை உலக அரங்கில் பெருமையுடன் உயர்த்த வேண்டும் என முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“விளையாட்டில் வளர்வோம்! வெற்றியில் மிளிர்வோம்!” என்ற நம்பிக்கையூட்டும் வாழ்த்துடன் தனது பதிவை அவர் நிறைவு செய்துள்ளார்.இவ்வாறு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
English Summary
Make sports part of life Chief Minister Joseph Vijay instructions National Sports Day