மஹாராஷ்டிராவில் திடீர் திருப்பம்! ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பால் கட்சிகள் அதிர்ச்சி!  
                                    
                                    
                                   Maharashtra governor invites BJP's Fadnavis to form government
 
                                 
                               
                                
                                      
                                            மகாராஷ்டிராவில் இதுவரை நடைபெற்ற வந்த பாரதிய ஜனதா சிவசேனா கூட்டணி ஆட்சி ஆனது இன்றுடன் நிறைவடைந்தது. மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றுக் கொண்ட தேவேந்திர பட்னாவிஸ் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியரியை  சந்தித்து தன்னுடைய அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை நேற்று அளித்தார்.
இன்றுடன் சட்டப்பேரவை ஆயுட்காலம் முடிவடைவதையடுத்து, முன்கூட்டியே தேர்தல் நடைபெற்ற நிலையில் பாரதிய ஜனதா சிவசேனா கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கக் கூடிய அளவிற்கு வெற்றி பெற்றாலும், இரண்டு கட்சிகள் இடையே யார் முதலமைச்சர் என்ற போட்டி நிலவுவதால் இதுவரை ஆட்சி அமைக்க முடியாமல் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குழப்பம் நீடித்து வருகிறது.
இதனிடையே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் நாங்களே எதிர்கட்சியாகவே இருக்கிறோம். பாஜக சிவசேனா ஆட்சி அமைக்க வேண்டும். அவர்களுக்கு தான் ஆட்சி அமைக்க மக்கள் அதிகாரம் கொடுத்து உள்ளார்கள் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். 
இந்த நிலையில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை அறிவிக்க முடியாத சூழலில், ஆயுட்காலம் நிறைவடைய இருப்பதால் முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்ததாக அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரை சந்தித்த பிறகு தெரிவித்தார். 
இந்த நிலையில் குழுப்பம் நீடிக்கும் போதே அதிக தொகுதிகளை கைப்பற்றிய கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷியரி, அம்மாநில முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிசை அழைத்துள்ளார். பெரும்பாண்மை இல்லாத நிலையில் பாஜக ஆட்சியமைக்க முன் வருமா? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 
                                     
                                 
                   
                       English Summary
                       Maharashtra governor invites BJP's Fadnavis to form government