இபிஸ்க்கு எதிரான தயாநிதி மாறனின் வழக்கு ஒத்திவைப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலின் போது மத்திய சென்னை தொகுதி அதிமுக வேட்பாளருக்காக வாக்கு சேகரித்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திமுகவை சேர்ந்த தயாநிதிமாறன் 75 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை முறையாக செல்லிடவில்லை என குற்றம் சாட்டினார். 

அதனை மறுத்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தன் பெயருக்கும் கட்சிக்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் பேசியதாக மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் ஜூன் 27ம் தேதி நடைபெறும் என கூறி ஒத்தி வைத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madrashc postponed DayanidhiMaran case against EPS


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->