வீராப்பாய் பேசிய அமைச்சர்! சத்தமே இல்லாமல் கதறவிட்ட பிரதமர் மோடி! சிறப்பான சம்பவம்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயத்தில் கொரோனாவிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்ப வர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு ஒரு லட்சத்தை எட்டி உள்ளது.

இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் அமைச்சர் ஒருவர் முக கவசம் அணிய மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா முகக் கவசம் அணியாமல் இருந்திருந்தால் உடனே செய்தியாளர்கள் அவரிடம், தாங்கள் ஏன் முகக்கவசம் அணியவில்லை என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர், 'நான் எந்த நிகழ்ச்சியிலும் முக கவசம் அணிய மாட்டேன். அதனால் என்ன?' என்று கடுமையாக எதிர்க்கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் அம்மாநிலத்தில் அம்மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தன் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'நான் செய்தியாளர்களிடம் முக கவசம் அணிய மாட்டேன் என்று கூறியது சட்ட விதிமீறல் ஆக தெரிகிறது. இது இந்திய பிரதமரின் உணர்வுக்கு எதிரான கருத்து இல்லை. நான் எனது தவறை ஏற்றுக்கொண்டு வருத்தம் தெரிவிக்கிறேன். நான் இனி முகக்கவசம் அணிவேன். அத்துடன் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று அந்த செய்திக் குறிப்பில் அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madhya pradesh minister mask issue


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal