தரவரிசை பட்டியலை வெளியிட்ட மா சுப்பிரமணியன்...! 5 மாணவர்கள் தகுதி நீக்கம்...!
Ma Subramanian released ranking list 5 students disqualified
வருகிற 30-ந்தேதி தமிழகத்தில் மருத்துவப்படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கும் நிலையில் இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்டார்.

மேலும், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்காக 72,743 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.இது கடந்த ஆண்டை விட கூடுதலாக 29,680 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
மேலும், 7.5 % உள் ஒதுக்கீட்டில் 4,062 மாணவர்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது.இதனால், தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்க போலி ஆவணம் மூலம் 25 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது மாதிரியான போலி ஆவணங்கள் கண்டறியப்பட்டதால் 25 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கு முன்னதாக 20 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 5 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
Ma Subramanian released ranking list 5 students disqualified