''இளைஞர்களுக்கு வேலையில்லாத காலத்தில் நிவாரணம் வழங்க வேண்டும்''; மு.வீரபாண்டியன் கோரிக்கை..!
M Veerapandian demands that relief be provided to youth during their unemployment period
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் இணைப்பு சங்கமாக, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தை இணைக்கும் விழா நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.
இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பங்கேற்றார். அதன் பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;
தமிழ்நாடு முழுவதும் பணிபுரியும் 12,484 கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு தமிழக அரசு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும், தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும் எனவும், இவர்களுடைய கோரிக்கை மீது அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், வேலையில்லாத காலத்தில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் நீட் விலக்கு அளிக்க வேண்டும் எனவும், தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியது எனவும் கூறியுள்ளார். எனவே, தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டுக்கான தொகுதிகளை குறைக்கக்கூடாது என்றும், வட மாநிலங்களில் தொகுதிகளை அதிகரிக்கவும், தென் மாநிலங்களில் தொகுதியை குறைக்கவும் திட்டமிட்ட அரசியல் சதி நடக்கிறதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், தொகுதி மறுவரையறை விவகாரத்தில், தமிழக அரசுடன் இணைந்து போராடுவோம் என்றும், மேகதாது அணை கட்டுவது சட்டவிரோதமானது. காவிரி நதிநீர் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் நலத்திட்டங்களை நிறுத்தக்கூடாது எனவும், திட்டங்களின் பெயர்களை மாற்றக் கூடாது என்றும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
English Summary
M Veerapandian demands that relief be provided to youth during their unemployment period