மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும்-ராஜ் தாக்கரே.! - Seithipunal
Seithipunal


மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே கலந்து கொண்டார்.

அப்போது பேசிய இவர் மகாராஷ்டிராவில் மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என மகாராஷ்டிர அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஏன் அதிக ஒலியில் ஒலிக்கப்படுகின்றன? இதை நிறுத்தாவிட்டால் மசூதிகளுக்கு வெளியே அதிக ஒலியில் ஹனுமான் சாலிசா ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிக்கும்.

நான் பிரார்த்தனை அல்லது எந்த ஒரு மதத்திற்கும் எதிரானவன் அல்ல. எனது சொந்த மதம் குறித்து நான் பெருமைப்படுகிறேன். தேர்தலின் போது நான் எதிர்த்த கட்சிகளுடன் கூட்டணி வைத்து வாக்காளர்களுக்கு முதலமைச்சர் துரோகம் இழைத்து விட்டார்.

மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை. தேவேந்திர பட்னாவிஸை முதல் அமைச்சராக பிரதமர் மோடி குறிப்பிட்டபோது உத்தவ் தாக்கரே ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் அவருக்கு முதல்வர் ஆகும் எண்ணம் வந்தது. அதன் காரணமாக எதிர்க் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி உருவானதிலிருந்து மாநிலத்தில் சாதி அடிப்படையிலான வெறுப்பை பரப்பி வருகிறது. இன்றைக்கு மாநிலத்தில் சாதி பிரச்சினைகளுக்காக மக்கள் போராடுகிறார்கள் அதிலிருந்து நாம் எப்போது வெளியேறி இந்துக்களாக மாறுவோம்? என்று ராஜ் தாக்கரே பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Loudspeakers should be removed from mosques Raj Thackeray


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->