மக்களவை தேர்தல்: பிரசாரத்தை தொடங்கிய காங்கிரஸ்.!
Lok Sabha Elections Congress started campaigning
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கேரள மாநிலத்தில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில் அந்த பட்டியலில் 14 எம்.பிகள் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதே போல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் ஆலப்புழா தொகுதியிலும், சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளத்தின் ஆலப்புழா தொகுதியில் இன்று காங்கிரஸ் கட்சியினர் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இதில் கே.சி. வேணுகோபால் ரோடு ஷோவில் பங்கேற்றுத் தொண்டர்களை பார்த்து வாக்குகள் சேகரித்தார்.
English Summary
Lok Sabha Elections Congress started campaigning