பொய் பொய் பொய்! ஊழல் கொண்டு நடக்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் போலியானது! - தமிழிசை சௌந்தர்ராஜன்
Lies lies lies corrupt Stalin with you scheme is fake Tamilisai Soundararajan
வேலூர் மாவட்டத்தில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் ''தமிழிசை சவுந்தர்ராஜன்'' நிருபர்களைச் சந்தித்தார்.

தமிழிசை சவுந்தர்ராஜன்:
அப்போது அவர் தெரிவித்ததாவது,"அரசு செலவில் பலகோடி ரூபாய் பிரசாரத்துக்கு பயன்படுத்துவது போல் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உள்ளது.4 ஆண்டில் செய்ய முடியாததை 45 நாளில் செய்வதாக சொல்கிறார்கள்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திலும் ஊழல் உள்ளது. சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கிறார்கள். மனு அளிக்க வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.
மிக தவறான சூழல் உள்ளது.கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருவதை நாங்கள் மிகப் பெருமையாக கருதுகிறோம்.ஆண்டாள் காலம் தான் தமிழை வளர்த்தது. பெரியார் தான் தமிழை தூற்றினார். பிரதமர் வருகை எங்களுக்கு புத்துணர்ச்சி தரும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Lies lies lies corrupt Stalin with you scheme is fake Tamilisai Soundararajan