மீண்டும் எஸ்கேப்! சீமானுக்கு கைது நெருக்கடி? காவல் நிலையத்தில் குவிந்த வழக்கறிஞர்கள் குழு! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த மாதம் சென்னை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் நடிகை விஜயலட்சுமி இடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் விஜயலட்சுமி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

மேலும் சீமான் தன்னை கட்டாயப்படுத்தி ஏழு முறை கரு கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி குற்றம் சாட்டி இருந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடிகர் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. 

இந்தமருத்துவ பரிசோதனை நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் சென்னை வளசரவாக்கம் போலீசார் கடந்த 9ம் தேதி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பினர்.

ஆனால் பல்வேறு கட்சி பணிகளுக்காக வெளியூர் செல்ல இருப்பதால் தன்னால் ஆஜராக இயலாது என கூறியதால் இன்று ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீசார் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்பட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் சீமான் மீது ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 6வதாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவும் சேர்க்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜராகுவர் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் அவர் ஆஜராகவில்லை.

சீமானுக்கு பதிலாக நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை செயலாளர் தலைமையில் வழக்கறிஞர் குழுவினர் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர் ஆகாத குறித்து விளக்கம் அளித்துள்ளது.

குறிப்பாக சில பல காரணங்களால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக முடியவில்லை. சீமானின் இரு கடிதங்கள் காவல் நிலையத்தில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ல் வாபஸ் பெற்ற வழக்கின் தொடர்ச்சியா? எனவும், சீமான் மீது புதிய வழக்கு பதிந்து விசாரணையா? 13 ஆண்டுக்குப் பின் விசாரணையை தொடங்க நீதிமன்ற ஒப்புதல் பெறப்பட்டதா? என பல்வேறு கேள்விகள் அந்த கடிதத்தில் சீமான் தரப்பிலிருந்து எழுப்பப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு போலீஸ் பதில் தந்தால் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்ஙனக தயார் என சீமான் தெரிவித்துள்ளதாக வழக்கறிஞர்கள் குழு விளக்கம் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

lawyers appeared in police station behalf Seeman in Vijayalakshmi case


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->