கூட்டணி தான் முக்கியம்; ''பட்டியலின மக்கள் நலனில் திருமாவளவனுக்கு சிறிதும் அக்கறை இல்லை; அவர்களுக்கு துரோகம் இழைக்கிறார்'': எல்.முருகன் தாக்கு..! - Seithipunal
Seithipunal


பட்டியலின மக்களுக்கு வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் மிகப்பெரிய துரோகத்தை இழைத்து கொண்டு இருக்கிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எல்.முருகன், நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: திருமாவளவன் நிலையாக இல்லை என்பதை, அவர்  மாறி மாறி பேசி வருவது காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,  தூய்மைப் பணியாளர்களை, தூய்மைப் பணியாளர்களாகவே வைத்திருக்காமல், அவர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என்றும், தன்னை பொறுத்தவரை திருமாவளவன் பட்டியலின மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்து கொண்டு இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவருக்கு பட்டியலின மக்கள் நலனில் திருமாவளவனுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்வும்,  பட்டியலின மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், கடந்த 05 ஆண்டுகளில் திருமாவளவன் எந்த இடத்திலும் வாயே திறக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பட்டியலின மக்கள் எப்படி போனால் எனக்கு என்ன என்பது அவரது எண்ணமாக இருக்கிறதாகவும்,  அவருக்கு பொறுத்தவரை கூட்டணியில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் குறிப்பிடுகையில், கூட்டணியில் இருந்து எம்பி, எம்எல்ஏக்களாக ஆக வேண்டும் என்பது தான் அவருடைய குறிக்கோளாக இருக்கிறது என்றும், பட்டியிலின மக்களுக்காக எல்லோரும் குரல் கொடுத்து கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் கூட்டணியில் திருமாவளவன் இருப்பதால் தான் கேள்வி கேட்கின்றனர். கூட்டணியில் இருக்கும் போது எஜமானர்களிடம் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எங்கள் கூட்டணி ரொம்ப வலிமையான கூட்டணி. கூட்டணிக்கு எந்த வித பாதிப்பும் கிடையாது என்றும், 2026-ஆம் ஆண்டில் மிகப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போகின்ற கூட்டணி என்று தெரிவித்துள்ளார். அத்துடன், திமுகவின் கூட்டணி படுதோல்வி அடைய போகிறதாகவும், தேர்தல் நேரத்தில் உங்கள் எல்லோருக்கும் தெரியும். திமுகவில் இருந்து முக்கியமான ஆட்கள் வெளியே வருவதற்கு தயாராக இருக்கின்றனர் என்று பேசியுள்ளார்.

அத்துடன், (அவர்களுடன்) எங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கின்றது எனவும், அது யார் என்று இப்போது எப்படி சொல்ல முடியும் என்று கூறியுள்ளதோடு, எங்களது கட்சி அலுவகத்தில் வந்து இணையும் போது உங்களை எல்லாம் வைத்து கொண்டு தான் இணைய வைப்போம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பொறுத்து இருங்கள், திமுகவில் இருந்து மிகப்பெரிய தலைவர்கள் எல்லாம் எங்களுடன் வந்து இணைவார்கள் என்று அறிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் இருந்த போது தமிழகத்திற்கு, 05 ஆண்டுகளில் ரயில் திட்டங்களுக்கு ரூ.871 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. ஆனால், பாஜ அரசு இந்தாண்டு மட்டும் ரூ.6,626 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ரூ.30,000 கோடிக்கு மேல் ரயில்வேயில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அமலாக்கத்துறை சுதந்திரமான அமைப்பு என்றும், அவர்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் தான் ரெய்டுகள் நடைபெறுகின்றன என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் நிருபர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

L Murugan says Thirumavalavan has no interest in the welfare of Scheduled Castes people and is betraying them


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->