காலியாகும் திமுக கூடாரம்.! ஸ்டாலினுக்கே விபூதி அடித்த முக்கிய புள்ளி.! 9 கவுன்சிலர்களுடன் எஸ்கேப்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர மன்ற தலைவர் விஜய் கண்ணன் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் கண்ணனுக்கு குமாரபாளையம் நகர செயலாளர் பதவி மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி என இரண்டும் கிடைக்காத அதிருத்தியால் அதிமுகவில் இணைய முடிவு செய்து முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து திமுக தலைமை மற்றும் திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட  செயலாளர் ஆகியோர் குமாரபாளையம் நகர மன்ற தலைவர் விஜய் கண்ணனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று குமாரபாளையம் நகர மன்ற தலைவரும் திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் தலைவருமான விஜய் கண்ணன் தனது ஆதரவு கவுன்சிலர்கள் 9 பேருடன் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுகவில் பதவி கிடைத்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் எடுத்து நடத்த முடியும் எனவும், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் குறித்து அவதூறாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் குமரபாளையம் நகர மன்ற தலைவர் விஜய் கண்ணன் தனது ஆதரவு கவுன்சிலர் 9 பேருடன் பாண்டிச்சேரியில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாண்டிச்சேரியில் தங்கி அதிமுகவில் இணைவது குறித்து நகர மன்ற தலைவர் விஜய் கண்ணன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆளுங்கட்சியை சேர்ந்த நகர மன்ற தலைவர் தனது ஆதரவு கவுன்சிலர்களுடன் தலைமறைவாக உள்ள சம்பவம் திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kumarapalayam DMK city council president absconding with 9 councillors


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->