மூன்றாக உடைந்த அதிமுக.. ஓபிஎஸ், சிபிஎஸ், சசிகலா காரணம் இல்லை.. இவர்கள்தான் காரணம்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் வேலூர் சிப்பாய் புரட்சியின் உயிர் நீத்தவர்களின் நினைவாக வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி, முன்னாள் அமைச்சர் கே வி தங்கபாலு, காங்கிரஸ் மாவட்ட தலைவர் டீக்காராமன், சிறுபான்மை பிரிவு தலைவர் வாஹீத் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய கே எஸ் அழகிரி, வலிமையான அதிமுகவை மூன்றாக உடைத்து இருப்பதற்கு யார் காரணம் என்றால், அந்த கட்சியில் உள்ள ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் காரணமெல்லாம், சசிகலாவும் காரணம் அல்ல. அதிமுக மூன்றாக உடைந்ததற்கு ஆர்எஸ்எஸ் இயக்கம் தான் காரணம். வலிமையான கட்சிகளை பலவீனப்படுத்துவதன் மூலமாகவே அவர்கள் காலூன்ற முடியும் என்பதற்காக இந்த வேலையை செய்து வருகின்றனர். 

தமிழ்நாட்டில் மதசார்பற்ற கூட்டணியை பிளவுபட்டால் அண்ணா திமுக மூலம் ஆர் எஸ் எஸ் தமிழ்நாட்டில் காலூன்று விடும். மத சார்பற்ற கூட்டணி கட்சிகளின் உள்ளவர்கள் இதனை உணர்ந்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். காட்டிக் கொடுப்பவர்களை கண்டுபிடித்து அந்த கட்சியின் பிளவை ஏற்படுத்திய ஆட்சியை கைப்பற்றுவோம் என்ற கொள்கையில் பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. 

மதசார்பற்ற கூட்டணி உள்ள கட்சிகளின் அடிப்படை கொள்கையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தான் பலம் வாய்ந்த மத சார்பற்ற கூட்டணி அமைந்துள்ளது. சட்டமன்றத்தின் மூன்று தீர்மானங்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக நிறுவப்பட்டது. திமுக, காங்கிரஸ் கூட்டணி உடைத்து எப்படியாவது குள்ளநரி தந்திரத்தின் மூலம் தமிழ்நாட்டில் காலூன்று விட வேண்டும் என்று நினைவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ks alagiri says about admk issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->