வெளியான மருத்துவ ஆதாரம்... சிவராமன் மரணத்தில் மீண்டும் சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி முன்னாள் சிவராமன், எலி மருந்து சாப்பிட்டதால், இன்று காலை உயிரிழந்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு சிவராமனின் தந்தை இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து பலியானதாக சிசிடிவி கட்சிகள் வெளியாகியுள்ளன. 

அடுத்தடுத்த இந்த மரணங்கள் சந்தேகங்களை எழுப்புவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கம் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் சிவராமன் மரணத்தில் சந்தேகம் கிளம்பி இருப்பதாக, அவர் கடந்த ஜூலை மாதம் எடுத்துக்கொண்ட மருத்துவ சிகிச்சை மற்றும் டிஸ்சார்ஜ் சம்மரியை வெளியிட்டு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த அவரின் அந்த செய்திக்குறிப்பில், கடந்த 19 அன்று சிவராமன் கைது செய்யப்பட்டதும், தப்பியோட முயற்சித்ததாகக் கூறி, கால் உடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, அவர் எலி மருந்து சாப்பிட்டது குறித்து எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை. அவரது உடல் நலனும் எந்த பாதிப்புக்குள்ளானதாகத் தெரியவில்லை. 

அவர் கைது செய்யப்படப்போவதை அறிந்ததும், கடந்த 16 மற்றும் 18 ஆகிய இரு தினங்களும் எலி மருந்து உண்டதாக, திடீரென்று நேற்று மாலை முதல், செய்திகள் வெளியாகின. இன்று காலை, அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

கடந்த 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் எலி மருந்து சாப்பிட்டதாகக் கூறப்படுபவர், நேற்று மாலை வரை, ஐந்து நாட்களாக, எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்தார் என்பது மர்மமாக இருக்கிறது. 

அவர் எலி மருந்து உண்டதாக, திடீரென்று நேற்று மாலை முதல் செய்திகள் வெளியானதும், சந்தேகத்தை எழுப்புகிறது. கால் உடைந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி அன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவருக்கு, ஐந்து நாட்களாக, உடலில் வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவில்லையா? 

கடந்த ஜூலை மாதம், சிவராமன், எலி மருந்து தின்று தற்கொலை முயற்சி செய்திருப்பதாகத் தெரிய வருகிறது. தற்போது அதனைப் பயன்படுத்தி, இந்தப் பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளைக் காப்பாற்ற, சிவராமன் எலி மருந்து தின்றதால் மரணமடைந்து விட்டார் என்று கூறப்படுகிறதோ என்ற கேள்வி வலுப்படுகிறது. 

இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, முழுமையான விசாரணை நடத்தி, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri Sivaraman Death case BJP Annamalai statement


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->