'எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது'; கே.பி.முனுசாமி திட்டவட்டம்..!
KP Munusamy categorically asserts that the AIADMK will not extend support to the TVK under any circumstances
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போத, ''பல ஊடகங்களில் தவெகவுக்கு அதிமுக ஆதரவளிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அது முற்றிலும் தவறான செய்தி.'' என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ''எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவாக செயல்பட்டு வருகிறது. எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என்பதை எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை முதல் தவெகவுக்கு அதிமுக ஆதரவளிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இது குறித்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால், அவர்கள் இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், இன்று காலை முதலே அதிமுகவின் மூத்த தலைவர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், கே.பி.முனுசாமி 'எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது' என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
KP Munusamy categorically asserts that the AIADMK will not extend support to the TVK under any circumstances