ராமருக்கே சாமி ஈ.வெ ராமசாமி.... திமுக புது உருட்டு.!
KN Nehru and TR Balu Pressmeet about Gingee Masthan MLA Fund to Ayodhya Ramar Temple
செஞ்சி மஸ்தான் இராமர் கோவில் கட்டுவதற்கு நிதிஉதவி வழங்கியதற்கும், திமுகவிற்கு சம்பந்தம் இல்லை என்று கே.என் நேரு மற்றும் டி.ஆர் பாலு தெரிவித்தனர்.
நாங்கள் இந்துக்களுக்கு எதிரி இல்லை, எந்த சமுதாய பண்பாடுகளுக்கும், எதிரி இல்லை என்று தேர்தல் நேரத்தில் இந்துக்களுக்கு பட்டை நாமம் போட்டு காவடி எடுக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தேர்தல் முடிந்ததும் வெற்றியோ தோல்வியோ இந்து மக்களின் பண்பாடுகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் வசைபாடி வருகிறது.

தற்போது, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக டி.ஆர் பாலு மற்றும் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தபால் ஒட்டுமுறையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தேர்தல் அதிகாரி எங்களிடம் எந்த விதமான வாக்காளர்கள் குறித்த பட்டியலை தரவில்லை. இதனால் வழக்கு தொடுத்துள்ளோம்.
செஞ்சி மஸ்தான் இராமர் கோவில் கட்டுவதற்கு நிதிஉதவி வழங்கியதற்கும், திமுகவிற்கு சம்பந்தம் இல்லை. அவர் சொந்த பணத்தை கொடுத்துள்ளார். அவரிடம் நீங்கள் இது குறித்து கேட்டுக்கொள்ளலாம். ராமருக்கே சாமி ஈ.வே ராமசாமி.

வேல் வைத்துள்ளவர்கள் எல்லாம் வேலவர்கள் ஆகிவிடுவார்களா?.. அறுபடை வீடுகளில் ஐந்துபடை வீடுகளில் நாங்கள் வெற்றிகண்டுள்ளோம். திமுகவை வீழ்த்த பாஜக முயற்சி செய்கிறது. நாங்கள் இந்துக்களுக்கு எதிரி இல்லை " என்று தெரிவித்தனர்.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வேடம் என்பதை போல, திமுகவின் தேர்தல் வேடம் இது என்றும் நெட்டிசன்கள் திமுகவின் கருத்துக்களை சுட்டிக்காட்டுகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
KN Nehru and TR Balu Pressmeet about Gingee Masthan MLA Fund to Ayodhya Ramar Temple