வரலாறு எழுதும் கேரளம்: பெண்கள் வார்டில் 2 திருநங்கைகள் போட்டியிட அனுமதி...! - ஐகோர்ட்டின் உத்தரவால் புதிய முன்னேற்றம்!
Kerala writing history 2 transgenders allowed contest womens ward New progress due High Court order
கேரளாவில் அடுத்த மாதம் டிசம்பர் 9 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வேட்புமனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதற்கிடையில், ஆலப்புழை மாவட்டம் வயலார் மாவட்ட பஞ்சாயத்து பெண்கள் வார்டில் அருணிமா என்ற திருநங்கைவும், திருவனந்தபுரம் மாவட்ட பஞ்சாயத்து போத்தன்கோடு பெண்கள் வார்டில் அமேயா பிரசாத் என்ற திருநங்கைவும் காங்கிரஸ் சார்பில் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

ஆனால் “திருநங்கைகள் பெண்கள் வார்டில் போட்டியிட முடியுமா?” என்ற சந்தேகம் எழுந்ததால், அவர்களின் வேட்புமனு ஏற்கப்படுவதில் தொழில்நுட்ப தடைகள் ஏற்பட்டன. மாநில தேர்தல் ஆணையம் திருநங்கை வேட்பாளர்கள் பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டுகளில் போட்டியிட முடியாது என்று தெரிவிக்க, இரு திருநங்கை வேட்பாளர்களும் உடனே கேரள உயர்நீதிமன்றத்தை அணைந்தனர்.
இந்த விவகாரத்தை ஆராய்ந்த ஐகோர்ட்டு, தேவையான ஆவணங்களையும் அடையாளச் சான்றுகளையும் பரிசீலித்து உரிய முடிவை மாவட்ட கலெக்டர்கள் எடுக்கலாம் என்று உத்தரவிட்டது.
அதன்படி, இருவரின் ஆவணங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அருணிமா மற்றும் அமேயா பிரசாத் பெண்கள் வார்டில் போட்டியிட தகுதியுடையவர்கள் என கலெக்டர்கள் அறிவித்து அனுமதி வழங்கினர்.கேரளாவின் உள்ளாட்சி தேர்தலில் ஒரே கட்சி சார்பில் இரண்டு திருநங்கைகள் பெண்கள் வார்டில் போட்டியிடும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Kerala writing history 2 transgenders allowed contest womens ward New progress due High Court order