வரியை உயர்த்திய திமுக "விலைவாசியை எப்படி குறைக்கும்".!! முன்னாள் அமைச்சரின் கிடுக்கு பிடி கேள்வி.!!
KCveeramani ask how DMK reduces
வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி கேவி குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரும்பாக்கம், செஞ்சி, காலாம்பட்டு, பனமடங்கி, மாலிப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
அவருடன் வேலூர் புறநகர் மாவட்ட மாவட்டச் செயலாளர் வேலழகன், வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு மற்றும் நூற்றுக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் மருத்துவர் பசுபதிக்காக வாக்கு சேகரித்தனர்.

மாளிபட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திறந்த வெளி வாகனத்தில் நின்று வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அப்போது பேசிய அவர் "தமிழகத்தில் ஒரு குடும்பத்திற்காக மட்டுமே ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுகவினர் தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார்கள்.

திமுக கொடுத்த 520 வாக்குறுதிகள் நிறைவேற்ற முடிந்ததா? பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என சொன்னார்கள், முடிந்ததா? கேஸ் விலையை குறைப்போம் என சொன்னார்கள், முடிந்ததா? மின்சார கட்டணத்தை குறைப்போம் என சொன்னார்கள், முடிந்ததா? விலைவாசியை குறைப்போம் என சொன்னார்கள், முடிந்ததா?
இன்று வீட்டு வரியும், வணிக வரியும் பல மடங்கு உயர்ந்துள்ளது. தேர்தல் நேரத்தில் வரியை குறைப்போம் என சொன்னவர்கள் இன்று பல மடங்கு உயர்த்தி விட்டனர். பால் விலையும் உயர்ந்து விட்டது ன. அந்த அளவுக்கு திமுக ஆட்சியின் அவலம் உள்ளது. இதெல்லாம் உணர்ந்து மக்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்" என பிரச்சாரம் செய்தவர் வருகிறார்
English Summary
KCveeramani ask how DMK reduces