கரூர் விவகாரம்: மிரட்டும் திமுக அரசு? எதற்கு இவ்வளவு பதற்றம்? எந்தத் தியாகியைக் காப்பாற்ற? என்ன மர்மத்தை மறைக்க இவ்வளவு சித்துவேலைகள்? அதிமுக கேள்வி! 
                                    
                                    
                                   Karur Tragedy case cbi dmk mk stalin admk 
 
                                 
                               
                                
                                      
                                            கரூரில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடுத்த தன்னை ஆளும் கட்சியினரும் போலீசாரும் மிரட்டுவதாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று பிரபாகரன் முறையீடு செய்து இருந்தார்.
இதனையடுத்து நீதிபதிகள் சிபிஐ யிடம் உடனடியாக புகார் அளிக்கும்படியும், டிச.12 சிபிஐ வழக்கு விசாரணையுடன் இவ்வழக்கை பட்டியலிடவும் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "KarurTragedy வழக்கை CBI விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மனுதாரர் பிரபாகரன், தன்னை ஆளுங்கட்சி திமுக-வினர் அழுத்தம் கொடுப்பதாகவும், காவல்துறை, உயர் அதிகாரிகள் மனுவைத் திரும்பப் பெற மிரட்டுவதாகவும் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
 CBI விசாரணைக்கு எதிராக எதற்கு இந்த விடியா திமுக அரசு மிரட்டலில் இறங்குகிறது? எதற்கு இவ்வளவு பதற்றம்?
அப்படி என்ன மர்மத்தை மறைக்க இவ்வளவு சித்துவேலைகள் திமுக? எந்தத் தியாகியைக் காப்பாற்ற?என்று கேள்வி எழுப்பியுள்ளது.
 
                                     
                                 
                   
                       English Summary
                       Karur Tragedy case cbi dmk mk stalin admk