கரூர் கூட்ட நெரிசல்:39 உயிரிழப்புகள்…இனி இப்படியான துயரங்கள் நடக்காது!- உதயநிதி உறுதி
Karur stampede 39 deaths Such tragedies not happen again Udhayanidhi assures
கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து துணை முதலமைச்சர் 'உதயநிதி ஸ்டாலின்' ஆறுதல் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒவ்வொருவரின் நிலையும் மருத்துவர்களிடம் கேட்டறிந்து, தேவையான உதவிகளை உறுதி செய்தார்.

இதனிடையே,பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது,"முதலமைச்சர் உத்தரவின் பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 39 உயிரிழப்புகள் தமிழக அரசுக்கு மிகுந்த துயரம்" என்று தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,"உயிரிழந்தவர்களில் 17 பெண்கள், 9 குழந்தைகள் அடங்குவர்; கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 32 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல்லம் ஆகிய இடங்களைச் சேர்ந்த தலா 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் அழைக்கப்பட்டதாகவும், 3 மாவட்ட ஆட்சியர்கள் நிவாரண பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி,“பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும்; இனி இத்தகைய விபத்துகள் நடக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், “எடப்பாடி பழனிசாமி அதே இடத்தில் சில நாட்களுக்கு முன் கூட்டம் நடத்தியுள்ளார். கூட்டத்தை கட்டுப்படுத்துவது த.வெ.க.வினரின் கடமை. கட்டுக்கடங்காத கூட்டம் வந்தபோது தலைவர்கள் நேரம் தவறாமல் வருவது மிக அவசியம்,” என துணை முதலமைச்சர் உதயநிதி வலியுறுத்தினார்.
English Summary
Karur stampede 39 deaths Such tragedies not happen again Udhayanidhi assures