அரசியல் பரபரப்புக்கு மத்தியில் முதல்வரை நேரில் சந்தித்த கருணாஸ்.!
Karunas meet PM Stalin
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடிகர் கருணாஸ் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு, வருகின்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.கவுக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு தெரிவித்த நிலையில் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் கருணாஸ், சனாதானத்தை வீழ்த்தி சமூக நீதிக்காக தி.மு.கவுக்கு ஆதரவளிப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
மேலும் அதில், மக்கள் விரோத சனாதான சக்திகளை விரட்ட அடிமை துரோக அ.தி.மு.கவை வீழ்த்த தி.மு.கவுடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படை கட்சி பிரசாரத்தை மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டிருந்தது.