டீ கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து - முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி அருகே டீ கடையில் சிலிண்டர் வெடித்து காயமடைந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ​"கன்னியாகுமரி மாவட்டம், பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள ஷபீக் என்பவரின் தேநீர் விடுதியில் இன்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இந்த தீவிபத்தில் தேநீர்விடுதியில் வேலைபார்த்து வந்த மூசா (வயது 48), பிரவின் (வயது 25) சேகர், (வயது 52) மற்றும் அங்கு தேநீர் அருந்த வந்த சுப்பையன் (வயது 66), சுதா (வயது 43), சந்திரன் (வயது 62), சுசீலா (வயது 50) மற்றும் ஒருவர் உட்பட 8 நபர்கள் தீக்காயம் அடைந்துள்ளனர் என்ற செய்தியினை கேட்டு வருத்தமடைந்தேன்.

மேலும், தீக்காயமடைந்தவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளேன். ​விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டு உள்ளேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanniyakumari tea shop accident cm stalin announce


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->