''பொள்ளாச்சி வன்கொடுமை நிலையைத் தாண்டிய ஆபத்தான, பாதுகாப்பு இல்லாத சூழலில் தமிழக பெண்கள்''; திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி வேதனை..! - Seithipunal
Seithipunal


திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் கனிமொழி எம்.பி  பேசுகையில் கூறியதாவது;

திமுகவை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது என்றும், யார் வேண்டுமானாலும் வரலாம்; யார் வேண்டுமானாலும் போகலாம். நிலைத்து நின்று களமாட கூடிய இயக்கம் திமுக என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களைக் காப்பி அடிக்காத மாநிலங்களே கிடையாது என்றும், எங்கள் திட்டங்களைக் காப்பி அடியுங்கள் என்றும், ஆனால், அதைச் சரியாக மக்களுக்காகச் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி வன்கொடுமையை எல்லாம் கடந்து வந்திருக்கிறோம். அந்த நிலையை நோக்கி, அதைத் தாண்டிய ஆபத்தான, பாதுகாப்பு இல்லாத சூழலை தமிழக பெண்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இன்று, தவெக நிர்வாகி 50-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி, ஆபாசமாக வீடியோ எடுத்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறதாகவும், ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது. அவற்றுக்கு பதில் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், திமுகவின் திட்டங்களை பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள் என்றும், தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று தேர்தலுக்கு முன்பு சொன்ன விஜய்தான் என்று சுட்டிக்காட்டியதோடு, தற்போது டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் 42% பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள் என்று பேசியுள்ளதையும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அத்துடன், இது யாருடைய உழைப்பு? திமுக அரசின் உழைப்பு என்றும், நீங்கள் இதற்காக ஒரு துளிகூட உழைத்தது கிடையாது எனவும், பல்வேறு கட்டுக் கதைகளை சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார்கள். விஜய் முதல்வரான பிறகு தமிழக பெண்களின் நிலை என்ன என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய கனிமொழி தெரிவிக்கையில், தமிழகத்தின் பொருளாதாரம் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட காரணமாக இருந்தது முந்தைய திமுக ஆட்சிதான் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், திமுக கொடுத்த ரூ.1,000 பெற்ற பெண்களுக்குத்தான் தெரியும் பொருளாதாரச் சுதந்திரம் என்னவென்று. தேர்தலில் வாக்குகள் மாறலாம். ஆனால், பெண்களுக்கான சமூக மாற்றத்தை உருவாக்கியவர்தான் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

அத்துடன், நமது வீட்டில் எத்தனையோ விஷயங்களை பேசுகிறோம். ஆனால், நமது வீட்டில் நடந்த மாற்றங்களை பிள்ளைகளிடம் சொல்லித்தர மறந்துவிட்டோம் என்றும், வீட்டில் அவர்களிடம் அரசியல் பேசுங்கள் என்று கூறியுள்ளார். அதேப்போன்று சமூக இணையதளம் முக்கியம்; ரீல்ஸ் முக்கியம். நான் அதை மறுக்கவில்லை.

வீட்டில் இருக்கும்போது பிள்ளைகளோடு, பக்கத்து வீட்டில் இருப்பவர்களோடு, உற்றார் உறவினரோடு தயவு செய்து அரசியல் பேசுங்கள் என்றும், இந்த சமூகத்தை அரசியல்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல்படுத்தப்பட்ட சமூகம் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கட்டும் என்றும், ஆனால் அரசியல் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல், கடந்த 70 ஆண்டுகளாக நாம் செய்த சாதனையால் எவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள், வேலைக்கு செல்கிறார்கள், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கும் சூழலை உருவாக்கியிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளதோடு, இதைப் பற்றி எல்லாம் பேசுங்கள்.

அப்படி நாம் அவர்களிடம் இந்தக் கருத்துகளை எடுத்துக் கொண்டு சேர்த்தால் தான் அடுத்த தலைமுறை சரியான முடிவுகளை எடுக்கும் என்று கனிமொழி எம் பி.பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanimozhi states that women in Tamil Nadu are facing a dangerous situation that goes beyond the circumstances of the Pollachi sexual assault case


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->