பெரியாறு அணை, மேகேதாட்டு அணை பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்; சட்ட நடவடிக்கைகளையும் தொடருவோம்; அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்..! - Seithipunal
Seithipunal


தேனி ஆட்சியர் அலுவலகத்தில் அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமை வகித்தார். ஆட்சியர் இரா.வைத்திநாதன், தேனி எம்.பி தங்கதமிழ்செல்வன், பெரியகுளம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர்கள் க.சபரிஐங்கரன், ஜெகநாத்மிஸ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது;

குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், எந்த சமரசமும் இல்லாமல் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அதேப்போன்று லஞ்சம் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறதாகவும், நிலத்தடி நீரை திருடுபவர்கள், கல்குவாரிகளில் விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி அளவுக்கு நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இருந்தும் கடந்த ஆட்சியில் திமுக இதனை செய்யத் தவறவிட்டு விட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நிர்ணயித்த அளவுக்கு நீர்மட்டத்தை உயர்த்தாததால் 05 மாவட்ட சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலை இனி தொடராது என்று குறிப்பிட்டுள்ளதோடு, பெரியாறு அணை நீர்மட்ட பிரச்சினையில் உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் இருக்கும் என்றும், நீதிமன்ற வழிகாட்டுதல்களை கடுமையாக பின்பற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை, மேகேதாட்டு அணை என்று அரசியல் காரணங்களுக்காக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றதாகவும், இந்தப் பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம் என்றும், இதற்காக சட்ட நடவடிக்கைகளையும் தொடருவோம். பெரியாறு அணையில் முதல்போகத்துக்கு நீர் திறக்க வழிவகை செய்யப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Nirmal Kumar has categorically stated that Tamil Nadu will not yield its rights regarding the Periyar and Mekedatu dam issues


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->