திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அதிரடி கைது!  
                                    
                                    
                                   Kanchipuram Samsung Workers Protest CPI CPIM leader arrested 
 
                                 
                               
                                
                                      
                                            காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் 4வது வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை, தமிழ்நாடு தொழிலாளர் துறை உடனடியாக பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தொழிலாளர் துறை அமைச்சர், துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு இதுவரை 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக, அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.  அன்பரசன், சி.வி.கணேசன்  ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர்.
 இதற்கிடையே, சற்றுமுன் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாக சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்த சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Kanchipuram Samsung Workers Protest CPI CPIM leader arrested