உள்ளாட்சி தேர்தல் தோல்வி., அரசியலைவிட்டு போகிறாரா கமல்.! அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைகளுக்கும், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில், மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில், திமுக கூட்டணி 138 இடங்களை கைப்பற்றியுள்ளது.

அதிமுக கூட்டணி இரண்டு இடங்களை கைப்பற்றியுள்ளது. மற்ற எந்த ஒரு கட்சியும், சுயேச்சை வேட்பாளர்களும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. இதேபோல், மொத்தமுள்ள 1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில், திமுக கூட்டணி 1021 இடங்களையும், அதிமுக கூட்டணி 207 இடங்கையும் கைப்பற்றின. தனித்து போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 45 இடங்களை கைப்பற்றி, தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக உருவெடுத்து உள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஐந்து இடங்களையும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன. சுயேச்சை வேட்பாளர்கள் 85 இடங்களை கைப்பற்றி உள்ளனர்.  இதில், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. 

மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட நாள் முதல் ஒரு தேர்தல் வெற்றி கூட பெறாத நிலையில், இந்த தேர்தலிலும் தோல்வியடைந்துள்ளதால், அக்கட்சியின் தலைவர் கமல் அரசியலை விளித்து விலகுவாரோ? என்று சந்தேகம் எழுந்தது.

ஆனால், கமல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "உள்ளாட்சியில் தன்னாட்சி எனும் லட்சியக்கனலை இதயத்தில் ஏந்தி தேர்தலைச் சந்தித்த மநீம வேட்பாளர்களைப் பாராட்டுகிறேன். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மநீமவின் மக்கள் பணி இன்னும் விசையுடன் தொடரும்." என்று ஒரே போடாக போட்டுள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kamal say about election 2021 loss


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->