'எனது பெயரை சொல்லியுள்ளாரா..? முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் பதில் போடலாமா..? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில்..!
Kamal response to Vijays speech at the TVK conference
மதுரையில் நேற்று தவெக மாநாடு நடைப்பெற்றது. இதில், அக்கடிச்சியின் தலைவர் மற்றும் நடிகர் விஜய் தமிழக அரசியல் தலைவராகளை சரமாரியாக விமர்சித்து இருந்தார். இந்நிலையில், மாநாட்டில் விஜய் பேசியது குறித்த நிருபர்கள் கேள்விக்கு ' முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் பதில் போடலாமா,''என ராஜ்யசபா எம்பி கமல் பதிலளித்துள்ளார்.
மதுரையில் நடந்த தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், '' வரும் சட்டசபை தேர்தலில் திமுக - தவெக இடையே தான் போட்டி இருக்கும். நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு, ரிட்டயர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனோடு வந்துள்ளேன்,'' எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் மநீம தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துள்ள கமல், என்ன கருத்து சொல்வது..? எனது பெயரை சொல்லியுள்ளாரா..? யார் பெயரையாவது சொல்லியுள்ளாரா..? முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் பதில் போடலாமா..? அவர் எனது தம்பி என்று பதில் கூறியுள்ளார்.
English Summary
Kamal response to Vijays speech at the TVK conference