நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகிய முக்கிய நிர்வாகிகள்.! அதிர்ச்சியில் சீமான்.!! - Seithipunal
Seithipunal


2009ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை பல பேர் கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். பலரும் இணைந்து வருகின்றனர். கடந்தவாரம் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம் மற்றும் ராஜீவ் காந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தி வெளியானது.

இதுகுறித்து கல்யாணசுந்தரம் இடம் கேட்டபோது நான் கட்சியில் இருந்து விலகவில்லை. இது பொய்யான தகவல் என விளக்கம் அளித்தார். அதையடுத்து, சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நான் செத்தால் தான் நாம் தமிழர் கட்சியை இரண்டாக உடைக்க முடியும் என ஆவேசமாக கூறினர். சீமானின் இடத்தை பிடிக்க பேராசிரியர் கல்யாணசுந்தரம் ஆசைப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனைத்தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ்காந்தி கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில் கல்யாணசுந்தரம், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், வணக்கம் அண்ணா, கடந்த 11 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் கட்சியின் உறுப்பினராகவும், இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறேன். சமீப காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக, இனிமேல் கட்சியின் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இக்கடிதம் மூலம் எனது விலகலை அறிவிக்கிறார் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kalyanasundaram left to naam tamilar party


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->