சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை! - Seithipunal
Seithipunal


44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை நடத்த தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக மாமல்லபுரம் தயார் நிலையில் உள்ளது. 

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் அனைத்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சர்வதேச விளையாட்டு வீரர்கள் வருகை குறித்த விவரங்கள், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்குமிடம் வசதிகள், தொடக்க விழா மற்றும் நிறைவிழா ஏற்பாடுகள், விழிப்புணர்வு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கும் தேதியான 28ஆம் தே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அமைச்சர் எ.வா.வேலு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

july 28th 4 districts may be leave


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->