'I.N.D.I' கூட்டணியின் பாதி பேர் ஜெயிலிலும் மீதி பேர் பெயிலிலும்... - ஜே.பி.நட்டா விமர்சனம்.!  - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலை ஒட்டி ராஜஸ்தான், ஜாலவார் தொகுதியில் நடைபெற்ற பா.ஜ.க தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, இந்தியா கூட்டணி என்பது ஊழல் பாதுகாப்பு கூட்டணி. அதிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பொதுச் செயலாளர், மந்திரி என அனைவரும் அதே குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார்கள். 

காங்கிரஸ் கட்சி எங்கு பார்த்தாலும் ஊழல் செய்துள்ளது. ராகுல் காந்தி ஜாமினில் இருக்கிறாரா இல்லையா? சோனியா காந்தி, சிதம்பரம், ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோரும் ஜாமினில் தான் உள்ளனர். 

அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். இந்தியா கூட்டணி தலைவர்களில் பாதி பேர் ஜெயிலிலும் மீதி பேர் பெயிலிலும் இருக்கின்றனர். 

இந்திய மக்கள் ஊழல் அற்ற அரசை மட்டுமே விரும்புகிறார்கள். பிரதமர் மோடி தலைமையின் கீழ் நாடு வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. கற்பனைக்கு எட்டாத வளர்ச்சியுடன் இந்தியா முன்னேறி வருகிறது. 

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மின் இணைப்பு இல்லாத 18 ஆயிரம் கிராமங்களில் மின் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. 3.5 லட்சம் கிராமங்களில் சாலை வசதி, 80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் போன்றவை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JP Nadda slams INDIA alliance leaders


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->