ஜெயலலிதா வாக்குகளை பிரிக்க பிளான்! விஜய் வாக்கு வங்கி 20% தாண்டும்! இது மட்டும் நடந்தால் ஓங்கும் தவெக கை! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து, அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் தீவிரமாகி வருகின்றன. செங்கோட்டையன் தவெக சென்றது வெறும் ஆரம்பமே, “மெயின் பிக்சர் இன்னும் வரவில்லை” என அதிமுக வட்டாரங்களே கூறும் அளவுக்கு, கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவில் உள்ள சுமார் 10 முக்கிய தலைவர்களுடன் செங்கோட்டையன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும், இதில் ஒரு டாப் தலைவர் விரைவில் தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள், சில மூத்த எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிருப்தி கொண்ட முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் செங்கோட்டையன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், அரசியல் விமர்சகர் மற்றும் ஆய்வாளர் வம்சி சந்திரன், தமிழக வெற்றி கழகத்தின் எதிர்கால வாக்கு சதவீதம் குறித்த முக்கியமான கணிப்பை வெளியிட்டுள்ளார். தென் மற்றும் மத்திய தமிழ்நாட்டில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் அடிப்படையில், நடிகர் விஜய் தேர்தலில் நேரடியாக போட்டியிட்டால், தவெக குறைந்தபட்சம் 8% வாக்குகளை பெறும் என அவர் மதிப்பிட்டுள்ளார். ஆனால் விஜய் எந்தத் தொகுதியிலும் போட்டியிடாமல் இருந்தால், அந்த வாக்கு சதவீதம் 6%க்கும் கீழே குறையலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதே நேரத்தில், அடுத்த இரண்டு மாதங்களில் தவெக, அமமுக, ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து, செங்கோட்டையன் மூலம் அதிமுக அதிருப்தி வேட்பாளர்களை ஈர்த்து, விஜய் தீவிரமாகவும் திட்டமிட்ட முறையிலும் பிரச்சாரம் மேற்கொண்டால், அந்த கூட்டணியின் மொத்த வாக்கு சதவீதம் 20%ஐத் தாண்டுவது உறுதி என வம்சி சந்திரன் தெளிவாகக் கூறியுள்ளார்.

முன்னதாக தலித் இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு அதிக ஆதரவு இருப்பதால், தவெக திமுகவின் தலித் மற்றும் சிறுபான்மை வாக்குகளைப் பிரிக்கும் என்றே தான் கருதியதாக வம்சி சந்திரன் குறிப்பிட்டார். ஆனால் கடந்த இரண்டு மாதங்களில், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்த ஓபிசி வாக்குகளையும் விஜய் கவரத் தொடங்கியிருப்பதை களத்தில் உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன் (கவுண்டர் சமுதாயம்), டிடிவி தினகரன் (கள்ளர் சமுதாயம்),  ஒரே அரசியல் புள்ளியில் இணைந்தால், ஜெயலலிதாவுக்கு ஒருகாலத்தில் 40% வாக்குகளைத் தந்த ஓபிசி சமூக வாக்கு சமன்பாடு, ஓரளவு விஜய்க்கு சாதகமாக திரள வாய்ப்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவை அனைத்தும் நடிகர் விஜய் எவ்வளவு தீவிரமாக, வியூகபூர்வமாக தேர்தல் களத்தில் செயல்படுகிறார் என்பதையே சார்ந்தது என்றும், அவரது கள அரசியல் இந்த கணிப்புகளை நிஜமாக்கும் சக்தி கொண்டதாகும் என்றும் வம்சி சந்திரன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jayalalithaa plan to divide votes Vijay vote bank will cross 20 If this alone happens the hand of the Tavaka will be raised


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->