பாகிஸ்தானுக்கு தகவல் அளித்ததாக காங்கிரஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நேர்மையற்றது என்கிறார் ஜெய்சங்கர்..! - Seithipunal
Seithipunal


'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு முன்பு பாகிஸ்தானுக்கு தகவல் அளித்ததாக காங்கிரஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நேர்மையற்றது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டில்லியில், எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக, பாபாராளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஜெய்சங்கர் பேசும் போது கூறியதாவது:-

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன்பு பாகிஸ்தானுக்கு தகவல் அளித்ததாக காங்கிரஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நேர்மையற்றது என்றும் , 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை நடத்தப்பட்ட பின்னரே பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், எதிர்க்கட்சிகள் உண்மையை தவறாக சித்தரிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து பாகிஸ்தான் பரப்பும் எந்தவொரு போலி செய்திகளையும் அகற்றுவதில் அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்பின் தலைமையகங்களை பாதுகாப்பு படையினர் துல்லியமாக தாக்கினர் என்றும்,  இந்த நடவடிக்கை வேறு எந்த முந்தைய அரசாங்கமும் நினைத்திருக்காத ஒன்று என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், உலகில் உள்ள 200 நாடுகளில், மூன்று நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றன என்றும், அதாவது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை உலகம் பாராட்டியது என்பது தெளிவாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் பேசுகையில் குறிப்பிடுகையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதன் தாக்கம் அடுத்த சில நாட்களில் தெரியும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் இந்தியாவைத் தூண்டும் வரை ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்பதில் எந்த குழப்பமும் இல்லை என்றும் அறிவித்துள்ளார்.

அத்துடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பயங்கரவாதம் தவிர, பாகிஸ்தானுடன் வேறு எந்தப் பேச்சுவார்த்தையும் இருக்காது என்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jaishankar said that the Congress accusation of informing Pakistan is dishonest


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->