கச்சதீவு உரிமை இந்தியாவுக்கே; "ஆனால்".. மத்திய அமைச்சரின் தடாலடி.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக திமுகவின் இரட்டை வேடம் கிளி தெரியப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிதிருந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத துறை அமைச்சர் ஜெய்சங்கர் "கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவும், காங்கிரசும் தங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை என்ற அணுகுமுறையை கடைபிடித்தனர்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு 21 முறை பதிலளித்துள்ளேன். கடந்த 1974-ம் ஆண்டு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களின் உரிமை பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், அடுத்த 2 ஆண்டுகளில் மற்றொரு ஒப்பந்தம் மூலமாக அந்த உரிமைகள் பறிக்கப்பட்டன. கச்சத் தீவு இறையாண்மை இந்தியாவுக்கே உரியது என 1958ல் அன்றைய அட்டர்னி ஜெனரல் செதால்வத் கூறியுள்ளார்"என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jaishankar said Katchathivu rights was with India in 1958


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->