அசத்தலான திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்த ஜெகன் மோகன்!! மிரண்டு போன எதிர்கட்சிகள்!! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநில முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே டோர் டெலிவரி, விவசாயிகளுக்கு நிதியுதவி என பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்தார் 

குழந்தைகளை, பள்ளிகளுக்கு அனுப்பும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த தாய்க்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் ரூபாய் வரும்  2020 ஆண்டு ஜனவரி 2ம் தேதி முதல் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 

ஜெகன் மோகன் அறிவித்த திட்டங்களை செய்லபடுத்த ஆந்திர மாநிலம் அமராவதியில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அறிவித்த திட்டங்களை எப்படியெல்லாம் செயல்படுத்துவது என வழிமுறையை ஜெகன் மோகன் அறிவித்தார் 

செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வீட்டுக்கு வரும் என அறிவிதிருந்தார். அதன்படி 50 வீட்டிற்கு ஒரு ஏஜென்ட் போடப்பட்டு அவர் மூலமாக ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும் என அறிவித்தார்.

அதே போல் விவசாயிகளுக்காக ரையத் பரோசா என்ற திட்டத்தின் மூலம் 12 500 வரை சலுகை பெற்றுக்கொள்ளலாம் என ஜெகன் அறிவித்திருந்தார். இத்திட்டம் வருகிற அக்டோபர் இரண்டாம் தேதி முதல் அனைத்து விவசாயிகளுக்கும்  12 ஆயிரத்து 500  ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்

முதலமைச்சராக பதவியேற்ற பின்பு செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வீட்டுக்கு வரும் என அறிவிதிருந்தார். அதன்படி 50 வீட்டிற்கு ஒரு ஏஜென்ட் போடப்பட்டு அவர் மூலமாக ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும் என அறிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jagan mohan new schemes start


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->