பாஜக 20 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டது உண்மையல்ல!...உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் - செல்வப்பெருந்தகை! - Seithipunal
Seithipunal


மக்கள்தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனடியாக இணைத்து நடத்த வேண்டும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பல்வேறு கட்சிகள் கூட்டணி தொகுதி உடன்படிக்கை, கட்சி தாவுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைளில் ஈடுபட்டது. அதே சமயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் செல்வப்பெருந்தகை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இருந்தால் பா.ஜ.க. ஆட்சியில் மக்களின் வாழ்வாதார நிலை, வறுமை சூழல் ஆகியவை குறித்த முழு விவரங்களும் வெளி வந்திருக்கும் என்றும், 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் 20 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டதாக கூறுகிற புள்ளி விவரம் உண்மையானதல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுல்காந்தி கோரிக்கையின்படி உடனடியாக மக்கள்தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனடியாக இணைத்து நடத்த வேண்டும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It is not true that bjp has lifted 20 crore people out of poverty caste wise census should be conducted immediately riches


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->