‘ஜூனியர் கார்டு’ விளையாடும் உதயநிதி ஸ்டாலின்? திமுகவில் சீனியர்களுக்கு சம்மட்டி அடி..! திமுக சீனியர்களுக்கு நோ சீட்? - Seithipunal
Seithipunal


2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவில் உள்ளக அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சிக்குள் “ஜூனியர் கார்டு” விளையாடத் தொடங்கியிருப்பதாகவும், இதனால் பல மூத்த தலைவர்கள் பதற்றத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

பல ஆண்டுகளாக மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனியர் அமைச்சர்களை ஓரங்கட்டிவிட்டு, புதிய இளைஞர் தலைமையை முன்னிலைப்படுத்தும் திட்டம் ஸ்டாலினிடம் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்,“வெறும் சீனியாரிட்டி இருந்தால் மட்டும் போதாது; வெற்றி தருபவர்களுக்கே இனி பதவி”

என்று ஸ்டாலின் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த முறை திமுகவில் ஒரு புதிய ‘பெர்ஃபார்மென்ஸ்’ அடிப்படையிலான அணுகுமுறை அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. அதாவது, அமைச்சர்கள் தங்களது தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்; இல்லையெனில் அடுத்த கட்டத்தில் பதவி வாய்ப்பு குறையலாம்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிடும் காட்பாடி தொகுதியிலும் இந்த விவாதம் எழுந்துள்ளது. அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என்றாலும், அமைச்சர் பதவி குறித்து தலைமை மௌனம் காத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நீண்ட காலமாக செல்வாக்கு கொண்ட அமைச்சர் முத்துசாமி இடத்திலும் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக இளம் தலைமுறை முகமாக எம்.பி பிரகாஷை முன்னிலைப்படுத்தும் முயற்சி நடைபெறுகிறது என கூறப்படுகிறது.

இந்த மாற்றங்களுக்கு பின்னால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுத்து வரும் இளைஞர் முன்னேற்ற திட்டமும் காரணமாக இருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கட்சியில் புதிய தலைமுறையை உருவாக்கும் நோக்கில், பழைய முகங்களை மாற்றி புதிய தலைமுறையை முன்னிலைப்படுத்தும் முயற்சி நடைபெறுகிறது என கூறப்படுகிறது.

இதனால் தற்போது ஒரு பெரிய கேள்வி எழுந்துள்ளது:

  • இது கட்சியின் வளர்ச்சிக்கான தலைமுறை மாற்றமா?

  • அல்லது சீனியர்களை ஒதுக்கி புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் திட்டமா?

இந்த விவகாரங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகே உண்மை நிலை தெளிவாகும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Udhayanidhi Stalin playing the junior card DMK slams seniors No seat for DMK seniors


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->