தேர்தல் அதிரடி...!!! மயிலாப்பூரில் ரூ. 1.50 லட்சம் புரோட்டீன் பவுடர் மற்றும் புகையிலை பறிமுதல்...!!!
Election Crackdown Protein Powder and Tobacco Worth 1point50 Lakh Seized Mylapore
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மயிலாப்பூர் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

நேற்று அதிகாலை பட்டினப்பாக்கம் ஐயப்பன் கோயில் அருகே நடைபெற்ற வாகனச் சோதனையில், ஒரு காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புரோட்டீன் பவுடர் டப்பாக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக பம்மல் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல், மயிலாப்பூர் முசிறி சுப்பிரமணியம் தெருவில் நடைபெற்ற மற்றொரு சோதனையில், ஒரு காரில் கடத்தி வரப்பட்ட 150 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கண்டறியப்பட்டன.
இது தொடர்பாக பிடிபட்ட ராமகிருஷ்ணன் மற்றும் சிவா ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னையில் பரோட்டா மாஸ்டர்களாக வேலை பார்த்து வருவதும், ஆந்திராவிலிருந்து புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் இருவரையும் பறக்கும் படையினர் மயிலாப்பூர் காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
English Summary
Election Crackdown Protein Powder and Tobacco Worth 1point50 Lakh Seized Mylapore