காஸ் தட்டுப்பாடு நீங்கியது... மாநிலங்களுக்கு கூடுதலாக 20% வர்த்தக சிலிண்டர்களை ஒதுக்க மத்திய அரசு அனுமதி...! - Seithipunal
Seithipunal


ஈரான் போர் எதிரொலியாக சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டதால், வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வர்த்தக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது.

இதனால் நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது சிலிண்டர் முன்பதிவு குறைந்து, வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

மேலும், வர்த்தக சிலிண்டர் விநியோகம் மீண்டும் தொடங்கிய நிலையில், மாநிலங்களுக்கு கூடுதலாக 10% ஒதுக்கீடு செய்யவும், குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்தவும் மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 20% ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம் வர்த்தக சிலிண்டர்களுக்கான ஒதுக்கீடு 50% ஆக உயர்ந்துள்ளதால், உணவகங்கள், தொழிற்சாலை கேன்டீன்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் மையங்களுக்கு இனி தாராளமாக எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gas Shortage Resolved Central Government Authorizes Allocation 20 Additional Commercial Cylinders States


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->