மீண்டும் ஆட்டத்தை தொடங்க இதுதான் காரணமா? அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு? மேலிடம் கையில் லிஸ்ட்.. என்ன பொறுப்பு தெரியுமா?
Is this the reason to start the game again Is Annamalai a national responsibility The top brass has the list in their hands do you know what responsibility it is
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு பதவியில் இருந்து மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மாற்றம், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக – பாஜக கூட்டணியை சீர்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அதிமுகவை அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வந்தது கூட்டணிக்குள் சிக்கலை உருவாக்கக்கூடும் என்ற காரணத்தால், மாநிலத் தலைமையில் மாற்றம் செய்யப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளியாகின. எனினும், அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது
சமீபத்தில் பாஜகவின் தேசிய அமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய நிர்வாக அமைப்பில் அண்ணாமலைக்கு முக்கிய பதவி வழங்கப்படலாம் என ‘டைம்ஸ் நவ்’ உள்ளிட்ட சில தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த தகவலின்படி, தேசிய பொதுச்செயலாளர் பதவிக்கான பரிசீலனையில்
-
ராம் மாதவ்
-
அரவிந்த் மேனன்
-
அண்ணாமலை
-
சாம்பிட் பாத்ரா
-
ரவீந்திர ரெய்னா
ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது பாஜகவில் ஆறு தேசிய பொதுச்செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் சிலர் தொடரவும், சிலர் மாற்றப்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவல். அந்த மாற்றங்களின் போது அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அண்ணாமலைக்கு ஆறு தொகுதிகளின் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் குடும்ப காரணங்களைக் குறிப்பிடித்து அவர் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். இதனால், அவருக்கு மாநில அரசியலை விட தேசிய அரசியலில் பங்கு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
பாஜகவின் மகளிர் அணித் தலைவராக வானதி சீனிவாசன் தொடர வாய்ப்பு உள்ளதாகவும், தேசிய செயலாளர் பதவிக்கு ராஜீவ் பிஸ்லா பெயர் பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தேர்தல் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படுமா என்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இந்த தகவல்கள் உறுதி செய்யப்படாதவையாகவே பார்க்கப்படுகின்றன.
English Summary
Is this the reason to start the game again Is Annamalai a national responsibility The top brass has the list in their hands do you know what responsibility it is