தமிழக அரசியலில் புதிய சர்ச்சை...! கல்விக்கூடங்களில் அரசியல் நுழைவதா...? தவெக -வை குறிவைத்து வானதி சீனிவாசன் காரசார கேள்வி...! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களிடம், தவெக நிர்வாகிகள் முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி அரசியல் பிரசாரம் மேற்கொண்டதாக வெளியான காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்துக்கு வானதி ஸ்ரீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.அவர் பதிவில், சிறுவர் மற்றும் சிறுமிகளை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் தவெக நிர்வாகத்தின் செயல்பாடு கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என தெரிவித்துள்ளார்.

மேலும், “சமூக வலைத்தள ‘ரீல்ஸ்’ கவர்ச்சிக்காக பள்ளி மாணவர்களையே அரசியல் விளம்பர கருவியாக மாற்றும் இந்த நடைமுறை எப்போது முடிவுக்கு வரும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.உத்திரமேரூர் அருகேயுள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களிடம், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி, தவெக நிர்வாகிகள் அரசியல் நோக்கத்துடன் பேசிய காணொளி வெளியாகியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார காலத்திலேயே சிறார்களிடம், வீட்டிலுள்ள பெரியவர்களை தவெகவுக்கு வாக்களிக்கச் சொல்லுமாறு வாக்கு சேகரித்த அணுகுமுறை தற்போது பள்ளிக்கூடங்களுக்குள்ளும் நுழைந்திருப்பது ஜனநாயக மரபுக்கும் கல்விச் சூழலுக்கும் எதிரானது என சாடியுள்ளார்.

மாணவர்களுக்கு தலைவர்களின் வரலாறு, சாதனைகள், சமூக பங்களிப்புகள் குறித்து எடுத்துரைப்பது ஆசிரியர்களின் பொறுப்பு என்றும், அரசியல் கட்சியினருக்கு அரசு பள்ளிகளில் எந்த வகையிலும் இடமில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “விஜய்யே… கல்விக்கூடங்கள் உங்கள் புகழைப் பரப்பும் அரசியல் மேடைகள் அல்ல என்பதை உங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு உணர்த்துங்கள்” என நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“பள்ளிகள் கல்வி, ஒழுக்கம், நற்பண்புகளை விதைக்கும் புனித தளங்கள். அவை எந்த அரசியல் கட்சியின் விளம்பர மேடைகளாகவும் மாறக்கூடாது” என்றும் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is politics entering educational institutions Vanathi Srinivasan provocative question targeting tvk


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->