இந்தியாவிலேயே அதிக காலம் முதல்வர் பதவி வகித்த டாப் 10 முதலமைச்சர்கள் பட்டியல்!
India state cm top list Bihar Election 2025 Nitish Kumar
பீகார் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் நேற்று (நவம்பர் 20, வியாழக்கிழமை) 10-வது முறையாக அம்மாநில முதல்வராகப் பதவியேற்றார். இதன் மூலம், இந்தியாவில் அதிக ஆண்டுகள் முதல்வர் பதவி வகித்தவர்கள் பட்டியலில் அவர் முக்கிய இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவில் அதிக காலம் முதல்வராகப் பதவி வகித்த தலைவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
1. பவன் குமார் சாம்லிங் (சிக்கிம்): 25 ஆண்டுகளுக்கு மேல் (முதலிடம்).
2. நவீன் பட்நாயக் (ஒடிசா): 24 ஆண்டுகளுக்கு மேல் (பிஜு ஜனதா தளம்).
3. ஜோதி பாசு (மேற்கு வங்கம்): 23 ஆண்டுகளுக்கு மேல் (கம்யூனிஸ்ட் கட்சி).
4. கோகாங் அபாங் (அருணாசலப் பிரதேசம்): 22 ஆண்டுகளுக்கு மேல்.
5. லால் தன்ஹாவ்லா (மிசோரம்): 22 ஆண்டுகளுக்கு மேல்.
6. வீரபத்ர சிங் (இமாச்சலப் பிரதேசம்): 21 ஆண்டுகளுக்கு மேல்.
7. மாணிக் சர்க்கார் (திரிபுரா): 19 ஆண்டுகளுக்கு மேல்.
8. நிதிஷ் குமார் (பீகார்): 19 ஆண்டுகளுக்கு மேல் (தற்போது பதவியேற்றவர்).
9. மு. கருணாநிதி (தமிழ்நாடு): 18 ஆண்டுகளுக்கு மேல்.
10. பிரகாஷ் சிங் பாதல் (பஞ்சாப்): 18 ஆண்டுகளுக்கு மேல்.
English Summary
India state cm top list Bihar Election 2025 Nitish Kumar