மருத்துவ முறையில் இந்தியா தான் பெஸ்ட்.. அமெரிக்கா கூட தோத்துடும்!இந்திய மருத்துவ முறையை பாராட்டிய அமெரிக்க யூடியூபர்! - Seithipunal
Seithipunal


இந்தியாவை சுற்றிப் பார்க்க வந்த அமெரிக்க யூடியூபர் ஒருவர், இந்தியாவின் மருத்துவ முறை மற்றும் சிகிச்சை அமைப்புகளை பாராட்டிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில் சிகிச்சை பெறுவது எளிதும் பயனுள்ளதுமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த சார்லி எவான்ஸ் என்ற யூடியூபர் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த 148 நாட்களாக இந்தியாவில் தங்கி இருப்பதாகவும், இந்த காலத்தில் இந்திய சுகாதார அமைப்பை நேரடியாக அனுபவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரிஷிகேஷ் பகுதியில் தங்கியிருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அவர் கூறுகிறார். முதலில் தொண்டைப் புண் ஏற்பட்டது போல் உணர்ந்தாலும், ஆரம்பத்தில் எந்த மருந்தும் எடுக்காமல் இருந்துள்ளார். ஆனால் வலி அதிகரித்ததால் அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்றதாக அவர் தனது வீடியோவில் விளக்கியுள்ளார்.

அப்போது தான் இந்தியாவில் மருத்துவமனைக்கு செல்வது எவ்வளவு எளிது என்பதை உணர்ந்ததாக அவர் கூறுகிறார். மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் நேரடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுவது மிகவும் எளிதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் மருத்துவரை பார்க்க முன்பே நேரம் பதிவு செய்ய வேண்டியிருக்கும். அந்த அப்பாய்மெண்ட் கிடைக்கும் வரை பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் இருப்பதாகவும் அவர் கூறினார். இதற்கு மாறாக இந்தியாவில் நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற முடிவது அவருக்கு ஆச்சரியமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது சிகிச்சை அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். அருகிலுள்ள மருந்தகத்தில் இருந்து சில மாத்திரைகள் வாங்கி பயன்படுத்தியதாகவும், அவை மிக வேகமாக நல்ல பலன் அளித்ததாகவும் கூறினார். அமெரிக்காவில் கிடைக்காத சில மருந்துகள் இந்தியாவில் எளிதாக கிடைப்பது தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவம் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் பாராட்டினார். இந்தியர்கள் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர்கள் என்றும், பல வீடுகளில் இயற்கை மூலிகை மருந்துகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் வாழும் போது நண்பர்கள் கூட இயற்கை மருந்துகளை வழங்குவார்கள் என்றும், சில நேரங்களில் மருந்தகம் அல்லது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் வீட்டிலேயே சில நோய்களை சரி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அனுபவங்களை பகிர்ந்த அவரது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவைப் பற்றி எதிர்மறையாக பேசும் சிலருக்கு மத்தியில், தனது நேர்மையான அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்ததற்காக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India is the best in medical system even America is ahead American YouTuber praises Indian medical system


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->