'ஐந்து தொகுதியில் மு.க.ஸ்டாலின் சுட்டிக் காட்டும் நபர் தான் வெற்றி பெறுவார்'; அப்பாவு உறுதி..! - Seithipunal
Seithipunal


''முதல்வர் பணி ஏதோ ஆறு மணி நேரம் ஷூட்டிங் முடிந்ததும் வீட்டுக்கு சென்று ஓய்வு எடுப்பது போன்று கிடையாது. 24 மணி நேரமும் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்'' என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தமிழாகி முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது;

தமிழக முதல்வர் கையில்தான் காவல் துறை, உள்துறை உள்ளது. ஆனால், இந்தப் பணி ஏதோ 06 மணி நேரம் ஷூட்டிங் முடிந்ததும் வீட்டுக்கு சென்று ஓய்வு எடுப்பதுபோன்ற பணி கிடையாது. 24 மணி நேரமும் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கரூரில் இவர் பங்கேற்ற கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்துவிட்டனர். ஆனால் அவர் தனி விமானம் மூலம் வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் அப்போதைய முதல்வர் இரவோடு இரவாக அனைத்து உதவிகளையும் செய்தார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போதைய முதல்வரால் இதுபோன்ற பணிகளை செய்ய முடியவில்லை என்றால், உள்துறையை தனது அமைச்சரவையில் யாருக்காவது கொடுத்துவிடலாம் என்றும், வேண்டுமென்றால் ஒப்புக்கு சப்பாக ஒரு துறையை கையில் வைத்துக் கொள்ளலாம் என்று சாடியுள்ளார்.

மாநிலத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் சட்டம் - ஒழுங்குகளை காக்கும் பணி ஒரு நாட்டின் முதல்வருக்கு கட்டாயம் உள்ளது. அதை மறைப்பதற்காக, அவர் பொறுப்பேற்ற நாள் முதல் இது பல மடங்கு பெருகி வருவதால் அவர் மற்றவர்கள் மேல் பழி போடுகிறார் என்றும், இது இயலாமையின் வெளிப்பாடு. எந்த முதல்வராவது 'எனக்கு வாயில் நல்லா வருது' என சொல்வார்களா? என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அப்பாவு பேசுகையில், அந்த அல்லு சில்லு கட்சியில்தான், 25 நபர்களை ஓட்டு போட வைக்க, புஷ்பா பட பாணியில் சோஃபா செட்டை முன்னர் அனுப்பிவிட்டு, அவரும் சென்றார். அவர்கள் அனைவரும் தற்போது புலம்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.

அதாவது, 08 அமைச்சர் பதவி தருவதாக சொல்லிவிட்டு, தற்போது எங்களை ரோட்டில் விட்டுவிட்டனர் என புலம்புவதாகவும், இது உண்மையா என தவெகவிடம் கேளுங்கள். எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியையே காலி செய்துவிட்டனர் என்று விமர்சித்துள்ளனர்.

மேலும், மக்களின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அம்பா சமுத்திரம் தொகுதியில் நிற்க வேண்டும் என்றும், அண்ணா, காமராஜர் போன்றவர்கள் அனைவரும் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். இதை மிகப் பெரிய பாதிப்பு என சொல்லிவிட முடியாது என்று கூறியுள்ளார்.

ஐந்து தொகுதியில் தற்போது தேர்தல் வரவிருக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் சுட்டிக் காட்டும் நபர் தான் வெற்றி பெறுவார் என்றும், முதல்வர் விஜய்யின் இயலாமை தற்போது தான் வெளிப்படுகிறது என்று அப்பாவு விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In five constituencies the candidate designated by MK Stalin is the one who will emerge victorious asserts Appavu


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->