கைது நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெறுக...! - தவெக அரசுக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தவெக அரசைக் குற்றம்சாட்டியுள்ள அவர், கைது நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த 6 பேர் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தேர்தல் பரப்புரையின்போது முதல்-அமைச்சர் விஜய் செல்லும் வழியில் பரப்புரை மேற்கொண்டார் என்ற காரணத்துக்காக, கார்த்திகா மற்றும் கட்சி நிர்வாகிகளைக் காவலர்களைப் பயன்படுத்திக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது பழிவாங்கும் அரசியலின் வெளிப்பாடாகும். தவெக அரசின் இத்தகைய நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், போதைப்பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் காவலர்களின் பணியைப் பயன்படுத்த வேண்டிய நிலையில், எதிர்க்கட்சியினரைப் பழிவாங்குவதற்காக அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளில் காவல்துறையை ஈடுபடுத்துவது அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் உள்ள காவல்துறையைத் தனது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காகப் பயன்படுத்தும் போக்கைத் தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும், கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையையும் திரும்பப் பெற வேண்டும் என்று தவெக அரசையும் முதல்-அமைச்சர் விஜய்யையும் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Immediately withdraw arrest TTV Dinakaran warns tvk government


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->