இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மக்களுக்கு முக்கிய அழைப்பு விடுத்த இம்ரான் கான்! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்த்தை ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், இந்த விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவைப்பெற முயன்றது ஆனால் சீனாவை தவிர வேற எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இல்லை. இதனைத் தொடர்ந்து, அண்மையில், காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு என்ற பெயரில், பாகிஸ்தானில் காஷ்மீர் ஹவர் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பிரச்சாரத்திற்கு அந்நாட்டு மக்களிடையே போதிய ஆதரவு அளிக்காமல் காஷ்மீர் ஹவர் பிரசாரம் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வரும் 13 ஆம் தேதி முசாபர்பாத்தில் காஷ்மீருக்கு ஆதரவான பிரம்மாண்ட கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய படைகள் காஷ்மீரில் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், எனவே, எந்த தயக்கமும் இல்லாமல் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதை காட்டவேண்டும் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபர்பாத்தில் பிரம்மாண்ட கூட்டம் நடைபெற உள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தினரால்ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏராளமான அடக்குமுறைகளும் மனித உரிமை மீறல்களும் மேற்கொள்ளப்படுவதாக அங்கு உள்ள மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனத்தை சந்தித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

imeran khan announced meeting against india


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->