"கிளாஸ் கட் அடிச்சுட்டு போனா அமைச்சர் யார்னு எப்படி தெரியும்?" - உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் காட்டமான பதிலடி! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகளின் போது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே தொடர்ச்சியான காரசாரமான விவாதங்கள் நிலவி வரும் சூழலில், அமைச்சரவை குறித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனத்திற்குத் தமிழக அமைச்சர் எஸ். ரமேஷ் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசில் யார் யார் எந்தெந்தத் துறை அமைச்சர்கள் என்றே மக்களுக்குத் தெரியவில்லை என்றும், கேட்டால் மட்டுமே தெரிகிறது என்றும் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ரமேஷ், "நாங்கள் பாட்டு பாடுகிறோம் என்று கூறிக்கொண்டு, கடந்த மூன்று வாரங்களாக உதயநிதி தான் ஒரே பாடலைப் பாடிக்கொண்டிருக்கிறார். சட்டமன்ற நடவடிக்கைகளை அவர் சரியாகக் கவனித்திருந்தாலே எந்தெந்தத் துறைக்கு யார் யார் அமைச்சர் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும்" என்று சாடினார்.

மேலும் தொடர்ந்த அவர், "மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுமையாக நிறைவடைந்த பின்னரும் கூட, தமக்கு அமைச்சர் யார் என்றே தெரியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது விசித்திரமாக உள்ளது. இதன் மூலம் சட்டமன்றம் எனும் வகுப்பறையை அவர் சரியாகக் கவனிக்கவில்லை என்பது தெளிவாகிறது. தினமும் அவை தொடங்கியவுடன் வந்து வெறும் ஒரு மணி நேரத்திலேயே 'கிளாஸ் கட்' அடித்துவிட்டு வெளியே சென்றுவிட்டால், பிறகு எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்பது அவருக்கு எப்படித் தெரியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How Will You Know Ministers If You Bunk Assembly Minister Ramesh Retorts to LOP Udhayanidhi


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->